தென்காசி, நவ.1:

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி ஊராட்சி மற்றும் குற்றாலம் பகுதியில் உள்ள சாலையோரங்கள் மற்றும் ஒடைக்கரையில் தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு  2000 பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றத
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு பாட்டப்பத்து டால்பின் வாழ்வியல் அமைப்பு , அரசு உயர்நிலை பள்ளி, கட்டளைக்குடியிருப்பு  கோதண்டராமபுரம்  சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ், அமைப்பு சார்பாக 2000 பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு டால்பின் வாழ்வியல் அமைப்பு மற்றும் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ்  சார்பாக அதன் ஒருங்கிணைப்பாளர் ச.சுரேஷ் தலைமை தாங்கினார். 

கட்டளைக்குடியிருப்பு அரசு உயர்நிலை பள்ளி ஆசிரியர் க.நந்தகுமார் முன்னிலை வகித்தார்  பொன்ராஜ்   அனைவரையும் வரவேற்று பேசினார்.
அதனை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற தகவல் பெறும் உரிமைச்சட்ட‌ பயிற்சியாளர்  மதுரை ஹக்கீம்  கருத்துரை வழங்கி பனை விதைகள் நடவு‌செய்யும் பணியை‌ துவக்கி‌ வைத்தார். 


தென்காசி தென்பொதிகை தமிழ்சங்க செயலர்  துரைமுருகன் மற்றும் ‌விதை சேகரிப்பாளர் முஸ்தபா ஆகியோரும் கருத்துரை வழங்கினர் .
இந்த நிகழ்ச்சியில் டால்பின் வாழ்வியல் அமைப்பினர் மற்றும் ‌இயற்கை‌ ஆர்வலர்கள்  மனோஜ் பிரபாகரன், முருகேஷ், கார்த்திக், மாதவன், இஷாந்த் இசக்கிமுத்து, ஆகியோர் கலந்து கொண்டு பனை விதைகளை நடவு செய்தனர்.
இறுதியில் மதன் குமார்   நன்றி கூறினார். 

படம் விளக்கம்
தேசிய ஒற்றுமை தினத்தை முன்னிட்டு‌ குற்றாலம் பகுதியில் சாலையோரங்கள் மற்றும் ஒடைக்கரையில் 2,000 பனைவிதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது . https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today