நெல்லை, ஆக. 17:

நெல்லைமாவட்டத்தில் 100 நாட்களில் 12,573 மனுக்களில் 3787 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ளசெய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின்; பதவியேற்ற பின்னர் திருநெல்வேலி மாவட்டத்தில் 100 நாட்களில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு திட்டமான உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டத்தில் 12,573 மனுக்களில் 3787 மனுக்கள் தீர்வுகாணப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை மூலம் 1058 நபர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது,738 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களும், 33 நபர்களுக்கு நில உரிமை பட்டா பெயர் மாற்றியும், 49 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளும் வழங்கப்பட்டுள்ளது. 

உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அடிப்படை வசதிகள் கோரி வழங்கப்பட்ட மனுக்களுக்கு ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 17 கோடி மதிப்பில் குடிநீர்வசதி, சாலைவசதி, தெருவிளக்குகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு பல்வேறு கிராமங்களை சார்ந்த 40 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெற்றுள்ளனர். மாவட்ட தொழில் மையம் மூலம் கிராமப்புறங்களை சார்ந்த 18 ஏழை பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் தொழிற் கடனாக ரூ.58 இலட்சத்தி 88 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

சமூக நலத்துறையின் மூலம் 180 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பு திட்டம் மற்றும் திருமண உதவிதொகை போன்ற நலத்திட்டங்களும், செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் தகுதியான 90 நபர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேலும் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு 1080 நபர்களுக்கு இணைய வழி மூலம் சிறப்பு பயிற்சி வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று தடுப்பு பணியை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் வகையில், வீடு விடாகச் சென்று நோய்த்தொற்று கண்டறியும் பணிக்காக 2,891 களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நோய் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 854 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் மற்றும் 516 படுக்கை வசதிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டு சிகிச்சைகள் வழங்கப்பட்டன. 

தமிழ்நாடு முதலமைச்சர்; ஆணைக்கிணங்க, நோய் தடுப்பு நடவடிக்கையாக 18 வயது மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் இதுவரை 4,21,032 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 225 நபர்களுக்கு ரூ.3.30 கோடி காப்பீட்டு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சாதாரண கட்டண நகரப்பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பண சலுகை அமல்படுத்தப்பட்டதன் அடிப்படையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 27,83,953 மகளிர்கள் பயணம் செய்துள்ளனர். அரிசிப்பெறும் 4,63,070 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4000/- வீதம், ரூ.185.23 கோடியும், திருக்கோயில்களில் நிலையான மாதச் சம்பளமின்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகையாக தலா ரூ.4000/- வீதம் 313 அர்ச்சகர்களுக்கு ரூ.12.52 இலட்சம் உதவித்தொகையும், 10 கிலோ அரிசி மற்றும் 15 வகையான மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டுள்ளது.

மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ. 2 ஆயிரம் கொரோனா கால உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 69 நபர்கள் பயன்பெற்றுள்ளனர்.
காவல்துறையை சார்ந்த இரண்டாம் நிலைக்காவலர் முதல் ஆய்வாளர் வரையிலான 1,814 ஆளிநர்களுக்கு ரூ.5,000/- வீதம் ரூ.90.70 இலட்சம் ஊக்கத்தொகையும், பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் மற்றும் காலமுறை இதழ்களில் பணிபுரியும் பத்தரிக்கையாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை ரூ.5000/- வீதம் 165 நபர்களுக்கு ரூ.8.25 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் உருவாக்கப்பட்ட ‘நெல்லை கிராப்ட்” விற்பனை நிலையத்தில் 10 வகையான கைவினைப்பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கைவினை பொருட்கள் உற்பத்தியில் 107 குழுக்கள் அதில் 1846 குடும்பங்கள் பணியில் ஆலோசனைகள் குறித்த குறைகளை தெரிவிக்க, ‘வணக்கம் நெல்லை” என்ற 97865-66111 எண் தொலைப்பேசி அறிமுகப்படுத்தப்பட்டள்ளது. 
பொதுமக்கள் எளிதாக வாட்ஸ்அப் மூலமாகவும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும், தங்களது குறைகள் மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பான புகார்களை, தெரிவிப்பதன் மூலம் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கைகள் எடுப்பதற்கு, ஏதுவாக இந்த சேவை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1458 மனுக்கள் பெறப்பட்டு, 792 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 577 மனுக்கள் மீது தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப் பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் உள்ளாட்சித் துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டிலுள்ள 1200க்கும் மேற்பட்ட விவசாய பாசன குளங்கள் மற்றும் ஆறுகள், கால்வாய்கள் ஆகியவற்றின் அடிப்படைத் தகவல்களை சேகரித்து Geographical Information System (GIS)  என்ற கணினி தொழில் நுட்பத்தின் அடிப்படையில் மாநிலத்திலேயே முதன் முறையாக மின்னனு நீர்வள வரைபடத்தை https://nellaineervalam.in  என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. 

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், காரையார் பகுதியில் உள்ள, காணி பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் நபார்டு வங்கி நிதி உதவியுடன், ரூ.8 இலட்சம் மதிப்பில், சரக்கு வாகனம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது, காணி இன மக்களின் உற்பத்தி பொருட்கள் இடைதரகர்களின்றி விற்பனை செய்ய மகாராஜா நகர் உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் காணி பழங்குடியினர் வாழ்வியல் அங்காடி திறந்து வைக்கப்பட்டுள்ளது. இஞ்சிகுழி பகுதியில் உள்ள 9 குடும்பங்களுக்கு சுமார் 2.5 இலட்சம் மதிப்பில், 100 வாட்ஸ் திறன் கொண்ட சோலாருடன் அடிப்படை மின் வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியினரின் குழந்தைகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் நோக்கத்துடனும், அவர்களை ஆக்கப்பூர்வமான பணிகளில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் போட்டித் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இதில் 33 மாணவ மாணவியர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர்.

திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குவது குறித்து, புகார்களை தெரிவிக்க சிறப்பு கட்டுப்பாட்டு அறை எண்: 9342471314 என்ற எண் அறிமுகபடுத்தப்பட்டு, இக்கட்டுபாட்டு அறையின் மூலம் இது நாள்வரை 248 மனுக்கள் பெறப்பட்ட, 243 மனுக்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

மேலும், வாழை நார் மூலம் கைவினைப் பொருட்கள் உற்பத்தியினை மேம்படுத்துவதற்காக, களக்காடு பத்மநேரி பகுதியில், காதி கிராப்ட் சார்பில், ரூ.1 கோடி மதிப்பில், பொது சேவை மையம் திறக்கப்பட்டுள்ளது. காட்டு நாயக்கன் சமுதாய மக்களின் நிண்ட நாள் கோரிக்கையினை ஏற்று 144 நபர்களுக்கு காட்டு நாயக்கன் ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. 

வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தெற்கு வள்ளியூர் கலைஞர் நகரில் தனியார் நிறுவன ரியல் எஸ்டேட் மணைகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் போல மாவட்ட நிர்வாகத்தின் மூலம், எல்லைகள்கள் நட்டு பிளாட் மாதிரியாக அமைக்கப்பட்டு தளவமைப்புகளுடன் கூடிய 51 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today