தென்காசி, சூலை 27:

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் பெண் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் தென்காசி, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களை சேர்ந்த பெண்கள் பங்கேற்றனர்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய பெண் போலீஸ் பணி மற்றும் சிறைத்துறை, தீயணைப்பு துறை ஆகியவற்றுக்கு நடந்த எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரத்து 623 பெண்களுக்கு பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மைதானத்தில்  உடற்கூறு அளத்தல், உடற்தகுதி தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட்டு 500 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

தேர்வில் கலந்து கொண்ட பெண்களுக்கு உயரம் அளக்கப்பட்டது. மேலும் அவர்களுடைய சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. இதைத்தொடர்ந்து ஓட்டப்பந்தயம் நடந்தது. 

 அழைப்பு கடிதம், அடையாள அட்டை, கொரோனா பரிசோதனை சான்றிதழ் வைத்திருந்தவர்கள் மட்டுமே தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டனர்.

அனைவரும் முகக்கவசம் அணிந்திருந்தனர். இத்தேர்வை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரை கண்ணன் தலைமையில் போலீசார் கண்காணித்தனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today