தென்காசி, நவ. 23:

சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை வழங்குதல் காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:
தென்காசி மாவட்டத்தில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த இந்திய/ மாநில அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு (1ஆம் வகுப்புமுதல்), பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு  www.scholarships.gov.in என்ற தேசியகல்வி உதவித்தொகை இணையம் மூலம்  விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைக்கு 15.11.2021 வரையிலும் இருந்த நிலையில்  தற்போது 30.11.2021 வரையிலும் விண்ணப்பிக்கலாம்  என கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆகவே சிறுபான்மையின மாணவ / மாணவியர்கள் பள்ளிப்படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும்  வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான படிப்புகளின் விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். www.scholarships.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today