தென்காசி, சூலை 10-
தென்காசி மாவட்ட காவல்துறை மற்றும் வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை இணைந்து பசிக்கிறதா எடுத்துக் கொள்ளுங்கள் திட்டத்தின் கீழ் வாசுதேவநல்லூர் மேற்குத் தொடச்சி மலைவாழ் மற்றும் பழங்குடினர் 34 குடும்பத்திற்கு அரிசி, காய்கனி, பருப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தலைமை தாங்கி மலைவாழ் மற்றும் பழங்குடினர் குடும்பத்திற்கு பொருட்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் காவல் ஆய்வாளர் அந்தோணி, வனச்சரக அலுவலர் பி.கே.ஸ்டாலின், வாசுதேவநல்லூர் பிரிவு வனவர் உபேந்திரன், காவல் உதவி ஆய்வாளர் வேல்பாண்டி, தனிபிரிவு புகழ்கேந்தி, வனக்காப்பாளர்கள் பூபதிராஜா, சிவகுமார், முருகேசன், குகன், அஜித்ராஜ் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் ஜோசப், வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை ஜாக்உசேன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே