நெல்லை,  டிச.23:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில் நெல்லை வண்ணார்பேட்டை போக்குவரத்து கழக பொது மேலாளர் அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஓய்வூதியர்களுக்கு 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க வேண்டும். மருத்துவபடி ரூ.300 ஆக உயர்த்தவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவதாணு தாஸ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் தங்கராஜ், சுப்பையா  முன்னிலை வகித்தனர். சி.ஐ.டி.யு. விருதுநகர் மாவட்ட தலைவர் மகாலட்சுமி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கோரிக்கைகளை விளக்கி சங்க மாநில துணைத் தலைவர்கள் வெங்கடாசலம், முத்துக்கிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், மாநில துணைச் செயலாளர் சுந்தரராஜன் ஆகியோர் பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். https://www.tnstc.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today