நெல்லை, ஆக.19:
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் பாளையங்கோட்டையில் உள்ள மின்சார வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட இணைச் செயலாளர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
மாநில துணைப் பொதுச்செயலாளர் ராஜாமணி, நெல்லை மாவட்ட செயலாளர் கருப்பையா, துணை தலைவர் தியாகராஜன், இணைச்செயலாளர் சீனி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
1.1.2020 முதல் வழங்க வேண்டிய அகவிலைப்படியை உடனே வழங்க வேண்டும். 70 வயது முடிந்தவர்களுக்கு 10 சதவீத ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்டத்தில் சேர்ந்து பணம் செலுத்தி சிகிச்சை பெற்றவர்களுக்கு மருத்துவ செலவு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் துணைத்தலைவர் ஆறுமுகம், இணைச்செயலாளர்கள் இசக்கி, சாமியா, சண்முகத்தாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே