தென்காசி, டிச.16:
பழைய குற்றாலம் அருவி பகுதிகளில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா மற்றும் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட போது குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. சுமார் 18 மாதங்களாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை.
இடையில் சில மாதங்கள் கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி பொதுமக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமானதால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை மிகவும் அதிக அளவில் பெய்ததால் குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அருவி பகுதியில் உள்ள தடுப்பு கம்பிகள், தரைத்தளம், அருவி பகுதிக்கு பொதுமக்கள் செல்லும் பாதை உள்ளிட்டவை பலத்த சேதம் அடைந்தது.
வரும் 20ஆம் தேதி முதல் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலம் அருவி பகுதியில் சேதமடைந்த பகுதிகளை சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தென்காசி யூனியன் சேர்மன் சேக் அப்துல்லா அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அருவிப் பகுதியில் உள்ள உடை மாற்றும் அறை கழிப்பிடங்கள் குடிநீர் குழாய்கள், காவலர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட பகுதிகளையும் ஆய்வு செய்து சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பார்த்தசாரதி, வட்டார வளர்ச்சி அலுவலர் குழந்தை மணி, யூனியன் துணை தலைவர் கனகராஜ் முத்துப் பாண்டியன், தென்காசி மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் வல்லம் எம்.திவான்ஒலி, தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு
உறுப்பினர்கள் தேன்பொத்தை கலாநிதி, சுமைதீர்ந்தபுரம் தெய்வநாயகம், பிரானூர் வினோதி இராமையா, காசிமேஜர்புரம் மல்லிகா சரவணன், பாட்டப்பத்து சுப்புலட்சுமி ஆனந்தராஜ், ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற தலைவர் தி.சுடலையாண்டி, ஆயிரப்பேரி ஊராட்சி மன்ற செயலாளர் இ.சங்கர சுப்பிரமணியன்,
திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் பன்லேண்ட் பொரோஸ் கான், பாட்டப்பத்து திமுக செயலாளர் ஆனந்தராஜ், பிரானூர் திமுக செயலாளர் ராமையா, திமுக பேச்சாளர் முத்துவேல், பாட்டாாக் குறிச்சி செயலாளர் வேல்ராஜ், முன்னாள் பஞ்.தலைவர் வே.இராமகிருஷ்ணன், குட்டி என்ற சாகுல்ஹமீது, உஸ்மான்,உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today