தென்காசி, டிச. 11:
குற்றாலத்தில் வரும் 20 ம் தேதி முதல் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில் மெயின் அருவிப்பகுதியில் நடைபெற்றுவரும் சீரமைப்பு பணிகளை தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் மற்றும் தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆகியோர் நேரில் சென்று பார்வைமிட்டு ஆய்வு செய்தனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை முன்னிட்டு குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் கடந்த 2 வருடங்களாக குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. தற்போது கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
எனவே அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டுள்ளது. எனவே குற்றாலம் அருவிகளை திறக்கவும் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து வரும் 20.12.2021 முதல் குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தர்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
குற்றாலம் அனைத்து அருவிகளிலும்20ஆம் தேதி குளிப்பதற்கான அனுமதி வழங்கியுள்ள நிலையில் அனைத்து அருவிப்பகுதிகளிலும் சீரமைைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி குற்றாலம் மெயின் அருவி பகுதியில் நடைபெறும் சீரமைப்பு பணிகளைகளை தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் ஆயிரப்பேரி தி.உதய கிருஷ்ணன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது ஒப்பந்தகாரரிடம் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்குமாறு கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், தென்காசி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளருமான ஆர்.எம்.அழகுசுந்தரம், தென்காசி வட்டார காங்கிரஸ் தலைவர் பெருமாள், குற்றாலம் பேரூர் திமுக செயலாளர் மந்திரம், வீட்டு வசதி சங்கத்தலைவர் குற்றாலம் சுரேஷ், குத்தாலிங்கம், சிவன் பாண்டியன் ஒன்றிய இளைஞரணி சுப்பிரமணியன் மற்றும் திமுக, காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today