நெல்லை, ஆக.20:


நெல்லை பாளையங்கோட்டை – திருவனந்தபுரம் ரோட்டில் புதிய பஸ் நிலையம் அருகில் நெடுஞ்சாலைத்துறை இடத்தில் சிலர் ஆக்கிரமித்து கடைகள் கட்டி இருந்தனர். அந்த கடைகளை அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வந்தனர்.
இந்த நிலையில்  நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் கிருஷ்ணசாமி, உதவி பொறியாளர் வேலாயுதம் ஆகியோர் தலைமையில் சாலை ஆய்வாளர்கள், ஊழியர்கள் ஆக்கிரமிப்பு பகுதிக்கு வந்தனர்.

பின்னர் பொக்லைன் எந்திரம் உதவியுடன் அங்கிருந்த கேன்டீன், பேக்கரி, டீக்கடை, பஞ்சர் கடை ஆகிய 4 கடைகளை இடித்து அகற்றினர். 
மேலும் அங்கிருந்த பொருட்களை லாரிகளில் ஏற்றி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதையொட்டி, பிரச்சினை ஏற்படாமல் இருக்க அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today