தென்காசி,  டிச.18:

செங்கோட்டை – கொல்லம் ரயில் போக்குவரத்து நேற்று முதல் தொடங்கிய நிலையில் செங்கோட்டை வர்த்தக சங்கம் சார்பில் ரயில் டிரைவர், பயணிகள், ரயில்வே பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்த செங்கோட்டை – கொல்லம் இடையேயான  இரயில் போக்குவரத்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று  முதல் பயணிகள் மற்றும் வியபாரிகள் நலன்கருதி இயக்கப்பட்டது. 

இந்நிலையில் நேற்று செங்கோட்டை இரயில் நிலையத்தில் இருந்து கொல்லத்திற்கு சென்ற இரயிலை இயக்கிய இரயில் டிரைவர் மற்றும் பணியாளர்களுக்கு, இரயில் பயணிகளுக்கு செங்கோட்டை நகர வர்த்தக சங்கத்தின்  தலைவரும், முன்னாள்  நகர்மன்றத் தலைவரும் செங்கோட்டை நகர திமுக செயலாளருமான  எஸ் எம் ரஹீம் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வழியனுப்பி வைத்தார். 

இந்த நிகழ்ச்சியில் இரயில்வே நலச்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணன், வர்த்தக சங்க நிர்வாகிகள் கல்யாணி, மணிகண்டன், இசக்கித்துரை பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். https://www.indianrailways.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today