தென்காசி, அக். 27:

தென்காசி மாவட்டத்தில் தீபாவளியை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் வரும் நவ.1,2,3 ஆகிய தேதிகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

2021-ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதை முன்னிட்டு 01.11.2021, 02.11.2021, மற்றும் 03.11.2021 ஆகிய தேதிகளில் தென்காசி மாவட்டத்தில் உள்ள  நியாயவிலைக் கடைகளில் காலை 08.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் விநியோகிக்கப்படும்.

தீபாவளிக்கு முன்னதாக பொருட்கள் வாங்காதவர்கள் வழங்கம்போல பண்டிகைக் காலம்முடிந்து 08.11.2021 திங்கட்கிழமை முதல் அத்தியாவசியப் பொருட்களை நியாயவிலைக் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

குடும்பஅட்டைதாரர்கள், கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான நிலையான வழிகாட்டுதல்களான முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி போன்றவற்றை பின்பற்றவேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபாலசுந்தரராஜ் ; செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார். https://www.tenkasi.nic.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today