தென்காசி , சூலை 18:
தென்காசி மாவட்டம் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டப்பணிக்கான கால்வாய் வெட்டும் பணிக்கு நிலம் கையகப்படுத்த சிறப்பு முகாம்கள் கடையம், பெரும்பத்து, ஆவுடையானூர்,வெங்கடாம்பட்டி ஆகிய பகுதிகளில் 3 நாட்கள் நடைபெற்றது.
இத்திட்டத்திற்காக நியமிக்கப்பட்டுள்ள வருவாய் துணை வட்டாட்சியர் சங்கரபாண்டியன், வருவாய் ஆய்வாளர் மார்டின், பொதுப்பணித்துறை உதவிபொறியாளர்கள் ராஜேந்திரன், ஜெய்சங்கர், உதவியாளர் பவுன்ராஜ், ஆவுடையானூர் கிராம நிர்வாக அலுவலர் சிவசங்கரவேல் ஆகியோர் அடங்கிய குழுவினரிடம், நில உரிமையாளர்கள் தங்களின் நில உடைமை ஆவணங்களின் நகல்களை ஒப்படைத்தனர்.
பெரும்பாலான ஆவணங்கள் சரியாக இருப்பதால் இழப்பீடுகள் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதில் ராமநதி-ஜம்புநதி இணைப்பு கால்வாய் செயல்பாட்டுக்குழு சார்பில் இராம.உதயசூரியன், தங்கநாதன், சௌந்தர்ராஜன், சேர்மக்கனி, சுப்பிரமணியன், நாகராஜ், கோபி, வேல்முருகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே