தென்காசி, அக்.4-
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில்தென்காசி, கடையநல்லூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
தென்காசியில் சிற்றாற்றின் தண்ணீர் செல்லும் பாதைகள் சீரமைக்கப்படுகிறது. மேலும் ஜே.சி.பி. வாகனம் மூலம் மேல ஆவணி மூல வீதி, மட்டப்பா தெரு, அணைக்கரை தெரு, ஆசாத் நகர், முப்புடாதி அம்மன் கோவில் தெரு, கீழப்புலியூர் ஆகிய இடங்களிலும்,
வண்ணான் குளம் மற்றும் சீவலப்பேரி குளங்களிலும் மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணிகள் தென்காசி நகராட்சி ஆணையாளர் பாரிஜான் அறிவுரையின்படி சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில் தலைமையில் நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மகேஸ்வரன், ராஜ்குமார் மற்றும் ஈஸ்வரன் மேற்பார்வையில் தூய்மைப்பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு நடைபெற்று வருகிறது.
மேலும் மட்டப்பா தெரு பகுதியில் ஹிட்டாச்சி எந்திரம் மூலம் குப்பைகள், மண் அப்புறப்படுத்தப்பட்டு மழைநீர் எளிதில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/