தென்காசி டிச .11:
தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர தலைவர் அழகு கிருஷ்ணன் மரக்கடையில நடைபெற்ற தீவைப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக்கோரி விசுவ இந்து பரிசத் மாநில தலைவர் குழைக்காதர், மாநில அமைப்பாளர் சேதுராமன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஆர்எஸ்எஸ், விஷ்வ ஹிந்து பரிஷத் இந்து முன்னணி, பாரதிய ஜனதா கட்சி சார்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் தென்காசி கலெக்டரிடம் கோரிக்கை மனு ஒன்றினை கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட 13 பேர்கள் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானதற்கு இதயப்பூர்வமான அஞ்சலியை செலுத்துகிறோம். பாகிஸ்தான் சீனா அச்சுறுத்தல்கள் உள்ள நிலையில் அவற்றை எதிர்கொள்ளும் வகையில் உறுதியோடு இருந்த ராணுவ தளபதியின் மறைவு ஈடு செய்ய முடியாத பெரும் இழப்பு ஆகும்.
இந்த விபத்திற்கான காரணத்தை கண்டறிய உடனடியாக விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது அந்த குழுவின் அறிக்கை வந்த பிறகுதன் கருத்து சொல்ல முடியும். புளியங்குடியில் விஎச்பி அலுவலகம் திறந்த இரண்டாவது நாள் நகர தலைவர் அழகு கிருஷ்ணனுக்கு சொந்தமான மரக் கடைக்கு தீ வைக்கப்பட்டுள்ளது சம்பவம் நடைபெற்று ஒன்றரை மாதங்கள் முடிந்த நிலையில் இன்று வரையில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தென்காசி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளோம். விரைவில் குற்றவாளிகளை கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி கோட்ட தலைவர் காமராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் குழைக்காதர், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பாளர் சேதுராமன், விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில இணைச்செயலாளர் காளியப்பன், ஹிந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் ராஜாஜி,
ஹிந்து முன்னணி மாநில செயலாளர் குற்றாலநாதன், பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், மற்றும் இந்து முன்னணி மாவட்ட தலைவர் ஆறுமுகச்சாமி, தென்காசி மாவட்ட பாரதிய ஜனதா தலைவர் மு.ராம ராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் ராஜேஷ் ராஜா, விஸ்வ இந்து பரிஷத் மாநில பிரச்சார பிரிவு செயலாளர் ஆறுமுககனி,
இந்து முன்னணி வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் சாக்ரடீஸ், பாஜக ஊடகப்பிரிவு மாவட்டத்தலைவர் குற்றாலம் செந்தூர் பாண்டியன், இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் எல்.ஜி.குத்தாலிங்கம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், சு.கருப்பசாமி, ராஜ்குமார், பரமசிவன், மாவட்ட சமூக ஊடகப் பிரிவு செயலாளர் காளிமுத்து, பஜ்ரங் தல் மாவட்ட அமைப்பாளர் சபரி மணி, உட்பட மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். https://www.tnpolice.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today