தென்காசி, நவ. 15:

சங்கரன்கோவிலில் நடைபெற்ற விழாவில் 69 பயனாளிகளுக்கு ரூ.59.16 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் ஏ.வி.ஆர்.எம்.வேலாயுத முதலியார் குற்றாலம்மாள் கலையரங்கத்தில் பல்வேறு அரசு  நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர்; ஆணைக்கிணங்க பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா வழங்கினார். சமூக பாதுகாப்புத்திட்டதின் கீழ் 5 பயனாளிகளுக்கு மாதந்தோறும் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். ரூ.1000, உதவித்தொகையும், உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 27 பயனாளிகளுக்கு ரூ.4இலட்சத்து 66 ஆயிரம் மதிப்பிலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு ரூ.10,165 மதிப்பிலும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா வீடுகள் திட்டத்தின் கீழ் 32 பயனாளிகளுக்கு ரூ.54 இலட்சத்து 40 ஆயிரம் மதிப்பிலும் ஆகமொத்தம் 69 பயனாளிகளுக்கு ரூ.59 இலட்சத்து 16 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.ஷீலா, சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஹஸ்ரத் பேகம், சங்கரன்கோவில் வட்டாட்சியர் ரா.ராம்குமார், சங்கரன்கோவில் தனிவட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) இரா.சாந்தி, சங்கரன்கோவில் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பி.சுப்பையன், திருவேங்கடம் வட்டாட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ஒசன்னா பெர்னான்டோ உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today