தென்காசி , நவ.20:

சிவகிரியில் நடைபெற்ற விழாவில் 86 பயானளிகளுக்குரூ.33.73 லட்சம் மதுப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சட்ட மன்ற தொகுதிதமிழ்நாடு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. சிவகிரி தேவர் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவிற்கு தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை வகித்தார்.

சங்கரன்கோவில் கோட்டாட்சியர் ஜெ.ஹஸ்ரத் பேகம் வரவேற்றார். 
யூனியன் சேர்மன் பொன் முத்தையா பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் சந்திரா லீலா வாழ்த்தி பேசினர். நலத்திட்ட உதவிகளை வாசுதேவநல்லூர் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சதன் திருமலைக்குமார் வழங்கினார்.

சமூக பாதுகாப்பு திட்டத்தில் மாதம் தோறும் 29நபர்களுக்கு ரூ.1000 ம்,  முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில்  23 நபர்களுக்கு ரூ.3,76,500,
வீட்டு மனை பட்டா வழங்கும் திட்டத்தில் 14 நபர்களுக்கு ரூ4,33,290ம்,உங்கள் தொகுதி முதல்வர் திட்டத்தில் 3 நபர்களுக்கு ரூ.2,979 ம், வேளாண்மை திட்டத்தில்2 நபர்களுக்கு ரூ.10,500 ம்,பிரதம மந்திரி அனைவரும் வீடு வழங்கும் திட்டத்தில் 15 நபர்களுக்கு ரூ.25,50,000 ம் எனமொத்தம் 86 பயானளிகளுக்கு ரூ. 33,73,269 ம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா, தாசில்தார் ஆனந்த், துணை தாசில்தார் வெங்கட சேகர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் நவநீதகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள், வேளாண்மை அலுவலர் இளஞ்செழியன், வருவாய் ஆய்வாளர் கள் சரவணக்குமார், வள்ளியம்மாள், மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர்கள் மாடசாமி, நல்லசிவன் முத்தையா, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பொன்ராஜ் மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளரும் பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம்,

மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணக்குமார், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சுந்தர வடிவேலு ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் கள் செல்வராஜ், கட்டபொம்மன்,பேரூர் செயலாளர் கள் இராயகிரி கேடிசிகுருசாமி வாசு சரவணன், மதிமுக ஒன்றிய செயலாளர் .கிருஷ்ணகுமார்,மாரிச்சாமி, விக்னேஷ் ராஜா,ராஜகுரு, புல்லட் கணேசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். https://www.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today