தென்காசி, நவ. 22:

தென்காசியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபால சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்ற் விழாவில் 59 பயனாளிகளுக்கு ரூ.35 லட்சத்து 44 ஆயிரத்து 505 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை தென்காசி எம்.எல்.ஏ., பழனிநாடார்  வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தலைமையில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் .எஸ்.பழனிநாடார் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துத்தரப்பு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு அறிவிக்கப்படும் அரசு நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படுகிறதா என்பதையும், கண்காணித்து வருகிறார்.
.
தென்காசி மாவட்டத்தில் மூத்தக்குடி மக்கள் பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தப்படவேண்டும். பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும். அனைத்து அரசு நலத்திட்டங்களும், அரசு உதவிகளும் மக்களுக்கு சென்றடைய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும் என பேசினார்.

நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 உதவித்தொகையும்,  5 பயனாளிகளுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.1000 விதவை உதவித்தொகையும், 9 பயனாளிகளுக்கு இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.1000 உதவித்தொகையும், 1 பயனாளிக்கு இந்திரா காந்தி விதவைகள் ஒய்வுதியம் ரூ.1000 உதவித்தொகையும், வழங்கப்பட்டது.

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.34 ஆயிரம் மதிப்பில் திருமண உதவித்தொகையும், 4 பயனாளிகளுக்கு ரூ.87,500 மதிப்பிலான இயற்கை மரண உதவித்தொகையும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறையின் கீழ் 2 பயனாளிகளுக்கு ரூ.11,730 மதிப்பிலான இலவச தையல் இயந்திரங்களும்.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 1 பயனாளிக்கு ரூ.4320 மதிப்பில் சக்கர நாற்காலியும், 1 பயனாளிக்கு ரூ.6,955 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 20 பயனாளிகளுக்கு தலா ரூ.1இலட்சத்து 70 ஆயிரம் மதிப்பில் ஆணைகளையும் ஆகமொத்தம் 59 பயனாளிகளுக்கு ரூ. 35இலட்சத்து 44ஆயிரத்து 505 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தி.உதய கிருஷ்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.ஜனனி சௌந்தர்யா, தென்காசி வருவாய் கோட்டாட்சியர் ந.ராமசந்திரன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பா.ஷீலா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் பா.குணசேகரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ்,  வட்டாட்சியர் அருணாசலம் உட்பட அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.https://www.tn.govin

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today