தென்காசி,  ஆக.5-


தென்காசி மாவட்டத்தில் நாளை 6ம் தேதி முதல் வருகிற 8-ந்தேதி வரை கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அவர் விடுத்துள்ள  செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தென்காசி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்பதால்
 நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 8-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வரை சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில், தென்காசி மேல சங்கரன் கோவில் ஆகியவற்றில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
இதேபோல் நாளை மட்டும் தென்காசி அரசூர் நங்கை அம்மன் கோவில், மேல முத்தாரம்மன் கோவில் ஆகியவற்றிலும், 8-ந் தேதி மட்டும் தென்காசி பொருந்தி நின்ற பெருமாள் கோவில், கரிவலம்வந்தநல்லூர் பால்வண்ணநாத சுவாமி கோவில் மற்றும் சிவசைலம் சிவசைலநாதர் கோவிலிலும் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.


கோவில்களில் நடைபெறும் பூஜைகள் தொடர்ந்து நடைபெறும். எனவே இந்த நாட்களில் மேற்குறிப்பிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் வருகை புரிவதை தவிர்த்து மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் கோபால சுந்தர ராஜ்  செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.  

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today