தென்காசி சூலை 4 -தென்காசி மாவட்ட ஆரம்ப பள்ளிஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
தென்காசி மாவட்ட ஆரம்ப பள்ளிஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சித் தலைவர், முதன்மைக் கல்வி அலுவலர் , தேசிய ஆயுள் காப்பீட்டு நிறுவன அதிகாரி, தென்காசி மாவட்ட கல்வி அலுவலர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோரை சந்தித்து கோரிக்கை மனுவினை கொடுத்தனர்.
மாவட்ட மைய பொறுப்பாளர்கள் வழங்கிய கோரிக்கைகள் வருமாறு:-
பெண்ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று வர போதிய பேருந்து இல்லாததை சுட்டிக் காட்டி, 9 வழித்தடங்களில் பேருந்து இயக்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
காசிநாதபுரம் தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் ஊதியம் இதுவரை பெறாததை சுட்டிக்காட்டி முதன்மைக் கல்வி அலுவலரிடம் எடுத்துக் கூறப்பட்டது. நடவடிக்கை எடுக்க உத்திரவு இட்டுள்ளேன், விரைவில் வழங்கப்படும் என உறுதியளித்தார்.
தேர்வு நிலை, சிறப்பு நிலை விண்ணப்பங்களுக்காக, மாவட்ட கல்வி அலுவலர் ஒவ்வொரு ஒன்றியத்திலும் குறை தீர்க்கும் முகாம் நடத்தி உடனடியாக ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் மீது ஆணை பிறப்பிக்க வேண்டும் .

தென்காசி மாவட்ட கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரின் ஆசிரியர் விரோதப் போக்கு பற்றி எடுத்துக் கூறப்பட்டது. அறிவுரை வழங்குவதாக முதன்மை கல்வி அதிகாரி உறுதியளித்தார்.
பள்ளிகளில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களுக்கு வழங்கப்படாத ஊதியத்தை உடனடியாக வழங்கிட கோரப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதாக கூறினார்.
ஆதித்திராவிடர் நலத்துறை சார்பில் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும் மாணவர்களின் பெயர் பட்டியல் விபரம் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு வழங்கப்பட வேண்டும் என கோரப்பட்டது.
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளின் ஒத்துழைப்பு சரியில்லை எனவும், சில மருத்துவமனைகளை சுட்டிக்காட்டி புகாரும் அளிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் மாவட்டத் தலைவர் ரமேஷ், மாவட்ட செயலாளர் மாரிமுத்து, மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், கல்வி மாவட்ட செயலாளர்கள் சிவகுமார், ராஜ்குமார் கல்வி மாவட்ட தலைர்கள் மாணிக்கம், சுதர்சன், ஆலங்குளம் வட்டாரத் துணை செயலாளர் பூரணராஜா மற்றும் தென்காசி வட்டாரப் பொறுப்பாளர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிருபர் நெல்லை டுடே