தென்காசி, ஜூன் 27 –

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சங்கரநாராயணசுவாமி திருக்கோவில், தென்காசி அருள்மிகு காசி விசுவநாத சுவாமி திருக்கோவில் கலையரங்கத்தில் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக வாழ்வாதாரம் இழந்துள்ள இந்து சமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தின் கீழுள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு ரூ.4000/-, 10 கிலோ அரிசியுடன் 15 வகை மளிகை பொருட்கள் கொண்ட தொகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம்.குமார்  வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழனிநாடார், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி, துணை ஆணையர் கணேசன், உதவி ஆணையர் (கூ.பொ) அருணாசலம் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே