தென்காசி டிச . 24:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில்  சிஐடியூ சார்பில் விசைத்தறி தொழிலாளர்கள் 10 சதவிகித கூலி உயர்வை அமல்படுத்த கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 418 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

விசைத்தறி தொழிலாளர்களின் 10 சதவீதம் கூலி உயர்வை அமல்படுத்த கோரி தென்காசி மாவட்ட சிஐடியூ விசைத்தறி தொழிலாளர் சங்கம் மற்றும் புளியங்குடி சிந்தாமணி டிஎன் புதுக்குடி விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பாக சங்கரன்கோவிலில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். விசைத்தறி சங்கத்தின் நிர்வாகிகள் ரத்தனவேல், மாணிக்கம், லட்சுமி, வேலு, முருகன், சக்திவேல்,  சுப்பிரமணியன், சுப்பையா, முன்னிலை வகித்தனர்.  

தென்காசி மாவட்ட சிஐடியு செயலாளர் எம் வேல்முருகன் போராட்டத்தை துவக்கி வைத்து கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார். இந்த நிகழ்ச்சியில்விசைத்தறி சங்கத்தின் கௌரவத் தலைவர் அசோக், சிஐடியு மாவட்ட துணைத்தலைவர்  மகாவிஷ்ணு, மற்றும் விசைத்தறி தொழிலாளர்கள் 800 பேர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் ஏற்கனவே தென்காசி கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் தொழிலாளர் துணை ஆணையாளர், தொழிலாளர் உதவி ஆணையாளர், வட்டாட்சியர், காவல்துறை உதவி கண்காணிப்பாளர், போன்ற அதிகாரிகள் முன்பு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் போட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பத்து சத கூலி உயர்வு இதுவரை அமுல்படுத்தாத விசைத்தறி முதலாளிகள் மீது நடவடிக்கை கோரியும்.

உடனடியாக விசைத்தறி முதலாளிகள் அமுல்படுத்த கோரியும் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் தொழிலாளர் துறை அதிகாரிகள் விசைத்தறி முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கரன்கோவில் பஸ் நிலையம் முன்பு நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 343 ஆண்கள் 75 பெண்கள்  என மொத்தம் 418 சிஐடியூ விசைத்தறி தொழிலாளர்களை  சங்கரன்கோவில் காவல்துறையினர்  கைது செய்தனர். https://www.texmin.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today