தென்காசி, ஆக.16:
சிவகிரி காவல்துறையினர் பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்சோ சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதேபோல் சிவகிரி காவல் துறையினர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு மருத்துவமனையிலுள்ள பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 181,1098 ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் புகார்களுக்கு காவல்துறையினரை எளிதில் தொடர்பு கொள்ளலாம் எனவும், 18 வயதிற்கு கீழுள்ள குழந்தைகளிடம் பாலியல் ரீதிரயாக செய்யப்படும் குற்றங்களுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் 18 வயது பூர்த்தியடையாத குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்கள் மீது குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். https://www.tnpolice.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today