தென்காசி,  டிச.1:

தென்காசி மாவட்டத்தில், தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்ப இணையவழி குற்றங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  கிருஷ்ணராஜ்  உத்தரவின் பேரில் சைபர் கிரைம் காவல்துறையினரால் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான பேருந்து நிலையம், மார்க்கெட், கோவில்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கு நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் பாவூர் சத்திரம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த பயணிகளிடம் தென்காசி சைபர் கிரைம் காவல்துறையினர் வாட்ஸ் அப்-ல்  வரும் தேவையில்லாத லிங்-ஐ தொடாதீர்கள், வெளிநாட்டில் இருந்து உங்களுக்கு பரிசு வந்திருப்பதாகவும் அதைப் பெறுவதற்கு பணம் செலுத்த வேண்டும் எனவும் மோசடி நடைபெறுகிறது, பேங்கில் இருந்து பேசுகிறோம் உங்கள் மொபைல் போனுக்கு வரும் ஓடிபி ஐ கூறுங்கள் என ஓடிபி ஐ பெற்றுக்கொண்டு உங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் திருடு போகலாம்.

தேவையில்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்வதால் உங்கள் தொலைபேசி ஹேக்கிங் செய்யப்படும். இதுபோன்ற பல்வேறு மோசடிகள் நடைபெறுவதாகவும் யாரும் நம்பி எந்த ஒரு தகவலையும் பணத்தையும் அளித்து ஏமாந்துவிடாதீர்கள் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள கடைகளில் சைபர் கிரைம் மோசடி குறித்து புகார் அளிக்கும் தொடர்பு எண் மற்றும் இணைய முகவரி அடங்கிய போஸ்டர்கள் ஒட்டியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். https://www.cybercrime.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today