தென்காசி,  டிச.6:

செங்கோட்டை நூலகத்தில் காவலர்  துறைத்தேர்வு மற்றும் ராணுவ பணியில் சேருவதற்கான வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. செங்கோட்டை நூலகத்தில் செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் மற்றும் ராஜ் ராஜ்ஜியம் அறக்கட்டளை சார்பாக காவலர் தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்பது பற்றியும் ராணுவ துறையில் பணியில் சேர்வது என்பது பற்றியும் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

வாசக வட்ட துணை தலைவர் ஆதிமூலம் தலைமையில் செண்பகக் குற்றாலம் முன்னிலையில் நடைபெற்றது காவல்துறை தேர்வில் வெற்றி பெறுவது பற்றி செங்கோட்டை  காவல் நிலைய உதவி ஆய்வாளர் சின்னத்துரை விளக்கவுரை ஆற்றினார். ராணுவத் துறையில் வேலையில் சேர்வது பற்றியும்  எழுத்துத் தேர்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது பற்றியும் முன்னாள் ராணுவத் துறை அதிகாரிகள் விநாயகம், ரமேஷ் ஆகியோர்  விளக்க உரை ஆற்றினார்கள்.

ராஜ் ராஜ்ஜியம் அறக்கட்டளையின் சார்பாக  ராஜ்குமார் வழக்கறிஞர் ஐயப்பன் சுதாகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். வாசகர் வட்ட பொருளாளர்  தண்டமிழ்தாசன் பா. சுதாகர் வரவேற்புரை ஆற்றினார். நூலகர் கோ.இராமசாமி அனைவருக்கும் நன்றி தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த 60 மாணவர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றார்கள். https://www.joinindianarmy.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today