நெல்லை, ஆக. 13:

நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் செல்வசுந்தரி தலைமை தாங்கினார். அனைத்து சிறப்பு ரயில்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண சலுகை அளிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கான தனிப்பெட்டிகளை ரயில்களில் இணைக்க வேண்டும். 
மாற்றுத்திறனாளிகளை அழைத்து செல்லும் உதவியாளர்களுக்கு பிளாட்பார டிக்கெட் கேட்க கூடாது. புதுச்சேரி, சண்டிகர் போன்ற யூனியன் பிரதேசங்களில் செயல்படுத்துவது போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. சங்க துணைத்தலைவர் தியாகராஜன், செயலாளர் குமாரசாமி, இணை செயலாளர் கற்பகம், நிர்வாகிகள் அகஸ்தியராஜன், சங்கரசுப்பு, முத்து மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today