தென்காசி, செப். 26:
தென்காசி மாவட்டத்தில் இன்று (26ம்தேதி) 3ம் கட்ட தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
தமிழக அரசின் ஆணையின்படி இன்று (26.9.2021) ஞாயிற்றுக் கிழமையன்று தென்காசி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பள்ளிகள் என 411 மையங்களில் மூன்றாவது கட்டமாக கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற இருக்கின்றது. இம்முகாமிற்கு வருகின்ற நபர்கள் தங்களுடைய ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண்ணை வழங்க வேண்டும். மேலும் தடுப்பூசி செலுத்த வருகின்ற பொதுமக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
சுகாதாரத் துறை, உள்ளாட்சி அமைப்பினைச் சார்ந்த பணியாளர்கள், கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலம் தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களுக்காக பிரத்தியோகமான முறையில் டோக்கன் வழங்கப்பட்டு தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டு முகாம்களுக்கு வருவதற்கு ஆயத்தபடுத்தப் பட்டுள்ளனர்.
இந்த முகாம்கள் காலை 7 மணி முதல் நடைபெறும். இம்முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி மற்றும் நிழல் பந்தல்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பணிகள் அனைத்தையும் உள்ளாட்சி அமைப்பினர் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சந்தர்;ப்பத்தை பயன்படுத்தி தடுப்பூசியினை செலுத்திக் கொண்டு கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ச.கோபால சுந்தரராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/