தென்காசி, நவ.27:

தென்காசி மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகம் முன்பு   ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
காலியாக உள்ள 1200-க்கும் மேற்பட்ட மருந்தாளுநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலைய மருந்தாளுநர்கள் பணி நேரம் குறித்த அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் நவாஸ்கான் தலைமை தாங்கினார். தென்காசி அரசு மருத்துவமனை  மருந்துக் கிடங்கு அலுவலர் நளினா, கடையநல்லூர் அரசு மருத்துவமனை தலைமை மருந்தாளுநர் ராஜேந்திரன், வி.கே.புதூர் தலைமை மருந்தாளுநர் மோகன், செங்கோட்டை மருந்தாளுநர் லட்சுமணன், ஆலங்குளம் பேச்சியப்பன், ஊர்மேலழகியான் சுவாமிநாதன், குருக்கள்பட்டி முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட செயலாளர் குமார் கோரிக்கைகள் குறித்து பேசினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் மாடசாமி, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட துணைத்தலைவர்கள் கோபி, ராஜசேகர், பல்நோக்கு சுகாதார பணியாளர் சங்க மாவட்ட தலைவர் கணேசன், பொது சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் வேலு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் துரை சிங் மற்றும் பலர் பேசினர். 
சங்க பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி நன்றி கூறினார். https://www.tnpc.ac.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today