தென்காசி, ஆக.25:

செங்கோட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடந்தது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மக்கள் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. நாடாளுமன்ற சபாநாயகராக தாலுகா உதவி செயலாளர் சுந்தர் இருந்தார். 

ஆளுங்கட்சி அமைச்சர்களாக தாலுகா உதவி செயலாளர் பழனிச்சாமி, நகர செயலாளர் சுப்பிரமணி, எதிர்க்கட்சி சார்பாக தாலுகா செயலாளர் மாரியப்பன் ஆகியோர். கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில் தேன்பொத்தை கிளை செயலாளர் செல்லையா, ஏ.ஐ.டி.யு.சி. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர் உலகநாதன், செயலாளர் தங்கதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today