தென்காசி, சூலை 11-
நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 726 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
தேசிய மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுப்படி நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நெல்லை கோர்ட்டு வளாகம் உள்பட 9 இடங்களில் 12 அமர்வுகளுடன் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.
நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதியும், சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருமான நசீர் அகமது தொடங்கி வைத்தார்.
இதில் நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி சமீனா, 4-வது கூடுதல் மாவட்ட நீதிபதி தீபா, தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு (பொறுப்பு) அமிர்தவேலு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு சிறப்பு கோர்ட்டு நீதிபதி பிஸ்மிதா, 1-வது கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுப்பையா, மாஜிஸ்திரேட்டு அருண்குமார் மற்றும் வக்கீல்கள், லோக் அதாலத் உறுப்பினர்கள், டாக்டர் பூவலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மக்கள் நீதிமன்றத்தில், கோர்ட்டில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், உரிமையியல், காசோலை மோசடி வழக்குகள் மற்றும் சமரசமாக முடிக்கக்கூடிய குற்ற வழக்குகள் உள்பட மொத்தம் 1,546 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் 726 வழக்குகளில் ரூ.5 கோடியே 69 லட்சத்து 53 ஆயிரத்து 184 வழங்க சமரச தீர்வு ஏற்பட்டது.
நிருபர் நெல்லை டுடே