தென்காசி, டிச. 28:

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 458 மனுக்கள் பெறப்பட்டன. தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் தலைமையில்  நடைபெற்றது.

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தனி நபர் கடன், விதவை உதவித்தொகை தொடர்பாக மற்றும் இதர மனுக்கள் என 458 மனுக்கள் பெறப்பட்டது.

இந்த கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரர்களுக்கு பதிலளிக்குமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது (பொ) சி.ராஜ மனோகரன், மாவட்ட வழங்கல் அலுவலர்  சுதா, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) ஆ.பிரான்சிஸ் மகாராஜன் மற்றும் அனைத்துத்துறை அரசு உயர் அலுவலர்கள் உட்பட பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasic.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today