தென்காசி டிச . 25:

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் தென்காசி மாவட்டத்தின் 2 வது மாவட்ட பேரவை மற்றும் ஓய்வூதியர் தினவிழா தென்காசியில் மாவட்ட தலைவர்  சலீம் முகம்மது மீரான் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் பாலுச்சாமி வரவேற்புரையாற்றினார்.

மாநில துணைத் தலைவர் எஸ். ஆறுமுகம் பேரவையை துவக்கி வைத்து ஓய்வூதியர்களின் வாலாறு குறித்து பேசினார். சங்கத்தின் வேலை அறிக்கையினை மாவட்ட செயலாளர் கந்தர மூர்த்தி நாயனார் சமர்ப்பித்து பேசினார். நிதிநிலை அறிக்கையினை மாவட்ட பொருளாளர்  நாராயணன் சமர்ப்பித்து பேசினார்.

அறிக்கைகள் மீது உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது . பேரவையில் தேனி மாவட்டத்தின் தலைவர் துரைராஜ் , பட்டுவளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மதுரை மண்டல தலைவர் கந்தசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட துணைத் தலைவர் துரை டேனியேல் பேராசிரியை சங்கரி , மாவட்ட இணை செயலாளர் நாராயணன் , செல்லப்பா, மாவட்ட துணை தலைவர் எஸ். அருணாசலம் ஆகியோர் தீர்மானங்களை முன்மொழிந்தனர். தீர்மானங்கள் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

மாநில துணைத் தலைவர் பி. இராமமூர்த்தி நிறைவுரையாற்றினார் . 
தென்காசி , ஆலங்குளம் , கடையநல்லுர் , செங்கோட்டை , சிவகிரி , சங்கரன்கோவில் ஆகிய வட்டக் கிளைகளிலிருந்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களாக பேரவையில் 25 பெண்கள் உட்பட 200 க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :-
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட 21 மாத ஊதியக்குழு நிலுவை தொகை மற்றும் அகவிலைப்படிமினை உடனே வழங்கிட வேண்டும்.

அனைத்து மருத்துவமனைகளிலும் மேற்கொள்ளப்படும் அனைத்து சிகிச்சைகளுக்குமான செலவுத் தொகையை முழுமையாக காப்பீட்டு நிறுவனமே ஏற்க ஆணையிட வேண்டும். கொரோனா நோயினால் காலமான ஓய்வூதியர் / குடும்பத்தினருக்கு பேரிடர் கால நிவாரண நிதியிலிருந்து ரூ 50000 வழங்க வேண்டும்.

ஓய்வு பெற்ற சத்துணவு , அங்கன்வாடி பணியாளர்கள் உள்ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அனைவருக்கும் ரூ 7850 / ஓய்வூதியம் வழங்கிடவும் குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ 1 லட்சமாக உயர்த்தி வழங்கிடவும் வேண்டும் . 
பட்டுவளர்ச் சித்துறையில் 30 ஆண்டுகளுக்கு மேல் தினக்கூலி பணியாளராக பணிபுரிந்து சிறப்பு காலமுறை ஊதிய பணியாளர் களாக ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வு கால பலன்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ 7850 ஓய்வூதியம் வழங்கிடவேண்டும்.

தென்காசியை தலைமையிடமாக கொண்டு அரசு மருத்துவக்கல்லூரி அமைத்திட வேண்டும் , சங்கரன்கோவிலில் மாவட்ட தலைமை மருத்துவமனை அமைக்க வேண்டும். கடையநல்லூர் , திருவேங்கடம் தாலுகாக்களில் சார்நிலை கருவூலம் அமைத்திடவேண்டும். தென்காசி மாவட்டத்தில் தேவையான இடங்களில் ரயில்வே மேம்பாலம் அமைத்திட வேண்டும்.

மாவட்ட ஆட்சித் தலைவரால் நடத்தப்பட வேண்டிய மாவட்ட அளவிலான மருத்துவ காப்பீடு குறை தீர் குழுவின் கூட்டம் மற்றும் ஓய்வூதியர்களின் குறைதீர் கூட்டம் மாதந்தோறும் நடத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கைகள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.  நிறைவாக மாவட்ட துணைத் தலைவர் எம். அருணாசலம் நன்றி  கூறினார். பேரவை ஏற்பாடுகளை தென்காசி வட்டக்கிளைத் தலைவர் ஆசிரியர் மாரியப்பன் , துணைத்தலைவர் எஸ்.ஆறுமுகம் உள்ளிட்ட வட்டக்கிளை நிர்வாகிகள்  செய்திருந்தனர். https://www.tnpensioner.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today