தென்காசி,  சூலை 21:


நெல்லை மாவட்டம்
கூடங்குளம் அரசு மருத்துவமனையில்  ரூ.1.50 கோடியில் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை, சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

கூடங்குளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு கூடங்குளம் அணுமின் திட்ட நிறுவனத்தின் கீழ் பணி புரியும் எல்.என்.டி. நிறுவனத்தின் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் உபகரணங்கள் ரூ.1.50 கோடிக்கு அமைக்கப் பட்டது.

இதன் திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி, ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை  திறந்து வைத்தார்.

விழாவில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர்  விஷ்ணு, சுகாதார துணை இணை இயக்குனர் நெடுமாறன், அணுமின் திட்ட நிர்வாக இயக்குனர் ராஜூ மனோகர் காட்டிலே, 5, 6-வது திட்ட இயக்குனர் சுரேஷ், எல்.என்.டி. நிறுவனத்துக்கான இயக்குனர் சுப்பிரமணியன், ராதாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரான்சிஸ் விமலா, கூடங்குளம் மின் பகிர்மான அலுவலர் ராஜன், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today