தென்காசி, அக். 2:
அபாகஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஹரினி உலக சாதனை படைத்துள்ளார். ஸ்மார்ட் சாய்ஸ் இந்தியன் அபாகஸ் ஃப்ரான்சைஸ், எலைட் உலக சாதனை மற்றும் இந்திய ரெக்கார்ட்ஸ் அகாடமி தனி உலக சாதனை போட்டி நடத்தியது. இந்த அபாகஸ் போட்டியில் தென்காசி குத்துக்கல்வலசை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.ஹரினி பங்கேற்றார். இவருக்கு 12 நிமிடங்கள் 4 வரிசைகளைக் கொண்ட 12 நிமிடங்களில் 4 வரிசைகளுடன் ஒற்றை இலக்க மன எண் கணித கூட்டுத்தொகை வழங்கப்பட்டது. இதில் இவர் ஒரு தனி உலக சாதனை படைத்தார். அபாகஸ் போட்டியில் உலக சாதனை படைத்த மாணவி எஸ்.ஹரினிக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்பட்டது.
இவருக்கு ராஜா அபாகஸ் பயிற்சி அளித்தார். சாதனைபடைத்த மாணவி எஸ்.ஹரினியை ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் கே.திருமலை, பள்ளி தாளாளரும் முதல்வருமான அன்பரசி திருமலை, ஆக்ஸ்போர்டு பப்ளிக் (சிபிஎஸ்இ) பள்ளி சட்ட ஆலோசகர் வழக்கறிஞர் தி.மிராக்ளின் பால்சுசி, தலைமையாசிரியை குழந்தை தெரசா, உதவி தலைமையாசிரியை முனைவர் சுப்பம்மாள், நிர்வாக அலுவலர் கணேசன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/