நெல்லை, நவ.24:
தமிழக சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாக்காளர் பட்டியலில் இருப்பவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டு உள்ளார்களா? என்று வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கி இருப்பதை திரும்பபெறவேண்டும்.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது வீடு, வீடாக சென்று ‘பூத் சிலிப்’ வழங்கியதற்கான மதிப்பூதியத்தை உடனே வழங்கவேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நெல்லை மாவட்ட தலைவர் சேவியர் ஜார்ஜ் ரவீந்திரன் தலைமை தாங்கினார்.
இணை செயலாளர் மாரியப்பன், கிளை தலைவர் காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சுந்தரராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
மாநில செயலாளர் ராஜூ கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். https://www.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today