நெல்லை,  நவ.20:

நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலகத்தை செவிலியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் நலச்சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில்,  நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர்  அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. மாநில பிரசார செயலாளர் ஜெகதா, மாநில துணைத்தலைவர் எலிசபெத் ராணி ஆகியோர் தலைமை தாங்கினர். 

இதில் மாவட்ட தலைவர் ஸ்டெல்லா, செயலாளர் சேசு இஞ்ஞாசி அஜிதா, பொருளாளர் அருள்ஜோதி ஆகியோர் கோரிக்கைகள் குறித்து பேசினர். அப்போது பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும் தரையில் அமர்ந்தும் தர்ணா செய்தனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர்  விஷ்ணுவை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். இதில் மாவட்ட துணைத்தலைவர்கள் ரோஸ்லின் எலிசபெத் ராணி, கண்ணம்மாள், காசிலட்சுமி, ஜெயசங்கரி, இணை செயலாளர் சாந்தி, அமைப்பு செயலாளர் நாவல்கொடி, பிரசார செயலாளர் நர்மதா உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in


செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today