தென்காசி,  அக்.29:

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக்கல்லூரியில் ரூ.2 கோடி செலவில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டு திறப்பு விழா  நடந்தது.

சென்னையில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் புதிய வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து புதிய வகுப்பறையில் சிவகுருநாதபுரம் இந்து நாடார் மகமை கமிட்டி நாட்டாண்மை தங்கையா நாடார் தலைமையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோபாலசுந்தரராஜ், தி.மு.க. மாவட்ட செயலாளர் பொ.சிவபத்மநாதன், பழனி நாடார் எம்.எல்.ஏ., தனுஷ் குமார் எம்.பி., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றினர்.

விழாவில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சத்தியவாகீஸ்வரன், உதவி பொறியாளர் நல்லசிங், நகர தி.மு.க. செயலாளர் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, அன்பழகன், அரசு ஒப்பந்ததாரர்கள் கரையாளனூர் சண்முகவேலு, வெள்ளத்துரை மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெயா நன்றி கூறினார். https://www.tenkasi.nic.in 

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today