தென்காசி, டிச.20:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை யில் இயற்கை விவசாயம் குறித்து விவசாயிகள் விழிப்புணர்வு திட்டம் – ஆன் லைன் கூட்டம் நடைபெற்றது.
செங்கோட்டை வேளாண்மை துறை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் இயற்கை வேளாண்மை பற்றிய உரை நிகழ்த்தி தொடக்கி வைத்தார்.
இயற்கை விவசாயம் குறித்த பிரதமர் மோடியின் ஹிந்தி உரையை புளியரை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பார்வதி தமிழில் மொழிபெயர்த்து வேளாண் பெருமக்களுக்கு செய்தியை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அட்மா அலுவலர் பொண்ணா சீர் மற்றும் டாங்கே செய்திருந்தனர்.
வருகைதந்த விவசாயிகளில் முன்னோடி இயற்கை விவசாயி சங்கர சுப்ரமணியம் தான் செய்து வரும் இயற்கைவேளாண்மை பற்றி விளக்கி கூறியதோடு இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுடையதாக இருந்ததாக கூறினார். மேலும் புளியரை முன்னோடி விவசாயி தங்கராஜ் மாரியப்பன் கூறும்போது எங்களையெல்லாம் பிரதமரின் உரை உற்சாகப்படுத்தியது எனக் கூறினார். https://www.tnagrisnet.tn.gov.in
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today