தென்காசி , மே 29- பாவூர்சத்திரம் அருகேயுள்ள அரியப்பபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கொரோனா  தொற்று அறிகுறிகள் உள்ள கர்ப்பிணி  பெண்களுக்கு சிகிச்சை மேற்கொள்ள தனி வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு 25 பெண்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் தென்காசி எம்.பி.  தனுஷ் எம். குமார் மற்றும் தி.மு.க. மாவட்ட செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் ஆகியோர் அங்கு சென்று   மருத்துவ துறை அதிகாரிகளுடன் கொரோனா வார்டினை  பார்வையிட்டு மருத்துவ மனையின் தேவைகள், குறைகளை, மற்றும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தனர். 


பின்னர் அரியப்பபுரம் ஊராட்சி அலுவலகத்தில் 18 முதல் 44 வயது உட்பட்டவர்களுக்கு கொரோனா  தடுப்பூசி செலுத்தும் முகாமினை எம்பி தொடங்கி வைத்தார்.அதைத் தொடர்ந்து கல்லூரணி ஊராட்சி செட்டியூரில் நடைபெற்ற கொரோனா நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமை தனுஷ் குமார் எம்பி தொடங்கிவைத்தார். 
இந்நிகழ்ச்சிகளில் , வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் லிங்கராஜ், கல்லூரணி ஊராட்சி செயலாளர் ஜெயசிங், கீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர் சீனி துரை,  மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ரமேஷ், பொறியாளர் அணி துணை அமைப்பாளர் கபில், நிர்வாகிகள் ஒயிட் ராஜா, பெரியார் திலீபன், செல்வன்,  தங்க ராஜா, முருகன், அழகுசந்திரன், ராம வாசகம் ,குணம், பரமசிவன் .ராஜேஸ்வரி, ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கொண்டனர்.                

நிருபர் நெல்லை டுடே