தென்காசி, டிச. 21-

தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள, அரசு ஆதி திராவிடர் நல மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் விடுதியினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தென்காசி மாவட்ட அரசு ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியில் சேதமடைந்த கட்டிடத்தையும், மேலகரம் அரசு ஆதி திராவிடர் கல்லூரி மாணவியர் விடுதியினையும், சங்கரன்கோவில் ஆவுடைபொய்கை தெப்பம் அருகில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல மாணவிகள் விடுதியினையும், கடையநல்லூர் வலசையில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிடர் நல துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி விடுதியினையும் மற்றும் குற்றாலம் கல்லூரி மாணவியர் விடுதியிலும்  ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் எம்.கயல்விழி செல்வராஜ் நேரில் சென்று பார்வையிட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை குறித்து பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, விடுதியில் அடிப்படை வசதிகள், மாணவர்களுக்கு தரமான உணவு தயாரித்து வழங்குவது குறித்தும் ஆய்வு செய்தார். விடுதியில்  மாணவர்களுக்கு உணவு வழங்க தயார்  நிலையில் இருந்த உணவை சாப்பிட்டு பார்த்து தரத்தினை உறுதி செய்தார். மேலும், விடுதியில் பல்வேறு தேவையான வசதிகள் கூடுதலாக ஏற்பாடு செய்வது குறித்து அரசு அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

இந்த ஆய்வின் போது தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பழனிநாடார், சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, வாசுதேவநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மரு.தி.சதன்திருமலைக்குமார், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கந்தசாமி, ஆதி திராவிடர்

நலத்துறை (தனி வட்டாட்சியர்) ஹென்றி பீட்டர், தென்காசி (வடக்கு) மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை, தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சேக் அப்துல்லா, சங்கரன்கோவில் ஒன்றிய குழுத்தலைவர் பி.லாலா சங்கரபாண்டியன், கீழப்பாவூர் ஒன்றிய குழுத்தலைவர் காவேரி, தென்காசி மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழு துணைத்தலைவர் கனகராஜ் முத்துப்பாண்டியன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர். https://www.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today