நெல்லை, நவ.15:

நெல்லை கோர்ட்டில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் பாளையங்கோட்டையில் உள்ள கோர்ட்டு வளாகத்தில் மெகா சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

முகாமுக்கு நெல்லை மாவட்ட முதன்மை நீதிபதி நசீர் அகமது, மாவட்ட ஆட்சித்தலைவர்  விஷ்ணு ஆகியோர் தலைமை தாங்கினர். முகாமில் நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் 21 அரசு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்த கண்காட்சி நடத்தப்பட்டது.

மேலும் முகாமில் தாட்கோ மூலம் ரூ.16.20 லட்சம் மதிப்பில் 18 பேருக்கு கறவை மாடுகள் வழங்குவதற்கான நிதி உதவியும், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ரூ.58 ஆயிரம் மதிப்பில் 6 பயனாளிகளுக்கு தையல் எந்திரம் மற்றும் இஸ்திரி பெட்டிகளும் வழங்கப்பட்டன.இவ்வாறு பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 320 பேருக்கு ரூ.2.40 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

முகாமில் நிரந்தர மக்கள் நீதி மன்ற தலைவர் நீதிபதி சமீனா, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி பிஸ்மிதா, குடும்பநல நீதிபதி குமரேசன், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் அமிர்த வேலு, மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, சமூக பாதுகாப்பு திட்ட உதவி ஆட்சியர்  குமாரதாஸ், வேளாண்மை இணை இயக்குனர் கஜேந்திர பாண்டியன், வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், குடிசை மாற்று வாரிய நிர்வாக பொறியாளர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.tenkasi.nic.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today