தென்காசி, ஆக. 30-


முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட பயனாளிகள் முதிர்வு தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன் பெற்று (18 வயது நிறைவடைந்தவர்கள்) முதிர்வு தொகை ரூ.25,000/- மற்றும் வட்டியுடன் சேர்த்து மொத்த தொகை பெற்றுக் கொள்ள விண்ணப் படிவத்தை  tenkasi.nic.in/forms/   என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெண் குழந்தை பாதுகாப்பு திட்ட வைப்புத் தொகை இரசீது நகல், குழந்தைகளின்  வங்கிக் கணக்கு புத்தகம் (தொடர் வங்கி பரிவர்த்தனையில் இருத்தல் வேண்டும்), குழந்தைகளின் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பள்ளி மாற்று சான்றிதழ், ஆதார் கார்டு நகல், தாய் மற்றும் குழந்தையின் பாஸ்போட் அளவு புகைப்படம் ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், பி 4/107 சுப்பிரமணியபுரம் தெரு, வ.உ.சி மைதானம் எதிரில், திருவனந்தபுரம் ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்ட – 657 002  என்ற முகவரிக்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today