நெல்லை,  நவ.17:

நெல்லை டவுன் வாகையடி முக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லை தாலுகா செயலாளர் துரை.நாராயணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தாலுகா குழு உறுப்பினர்கள் எஸ்.கே.செந்தில், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த போராட்டத்தின்போது, நெல்லை மாநகரம் முழுவதும் சேதம் அடைந்து உள்ள சாலைகளால் மக்கள் படும் சிரமங்கள் குறித்த புகைப்படங்களுடன் கூடிய டிஜிட்டல் பேனரை காட்சிப்படுத்தினர். மேலும் சாலைகளை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தினர். அந்த பேனரை பொதுமக்கள் பார்த்து சென்றனர். 

இந்த  போராட்டத்தில் தாலுகா குழு உறுப்பினர் ராஜேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீராம், சுடலைராஜ், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சுந்தரராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். https://www.cpim.org.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today