தென்காசி, சூன்: 29-

தென்காசி மாவட்டத்தில்போலீஸ் ஏட்டை தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சின்ன கோவிலாங்குளம் அருகே உள்ள கல்லத்திகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல் மகன் அசோகன் (வயது 27). டீக்கடை தொழிலாளியான இவர்  மதுபோதையில் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் தகராறு செய்தார். 
இதுகுறித்து தகவல் அறிந்ததும், சின்ன கோவிலாங்குளம் போலீஸ் ஏட்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். 
அப்போது அசோகன், போலீஸ் ஏட்டு பாலகிருஷ்ணனையும் அவதூறாக பேசி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தார். மேலும் ஏட்டுவின் மீது சேறு வீசியும், அவரது ஹெல்மெட்டை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டார். பின்னர் அசோகன் தப்பி ஓடி விட்டார். 
 இதுகுறித்து சின்ன கோவிலாங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அசோகனை வலைவீசி தேடி வந்தனர். அவரை கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பதுங்கி இருந்த அசோகனை தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

நிருபர் நெல்லை டுடே