தென்காசி, செப்.14-
தென்காசி மாவட்டத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நாளை (15ம் தேதி)வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம்.
தமிழகத்தில் தென்காசி மாவட்டம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி வரும் அக்.6 மற்றும் 9ம் தேதிகளில் தென்காசி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் நாளை (15ம் தேதி ) வேட்பு மனுத்தாக்கல் துவங்குகிறது. 22ம் தேதி வேட்பு மனுத்தாக்கல்செய்ய கடைசி நாளாகும். 23ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. 25ம் தேதி வேட்பு மனு வாபஸ் பெற கடைசி நாளாகும்.
தென்காசி மாவட்டத்தில் பாப்பாக்குடி, ஆலங்குளம், கடையம், கீழப்பாவூர்,மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு அக்.6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
கடையநல்லூர், குருவிகுளம், சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி ஆகிய ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு அக்.9ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அக்.12ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது .
செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today/