தென்காசி, ஆக. 20:

தென்காசி மாவட்டத்தில் சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு ரூ.2 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது என மாவட்ட  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர்  விடுத்துள்ள  செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
வேளாண் உட்கட்டமைப்புக்கான நிதியின் கீழ் கடன் வசதித் திட்டத்தில் வேளாண் பொருட்களுக்கான விநியோக தொடர் சேவை,  சேமிப்புக் கிடங்குகள், சேமிப்பு கலன்கள், சிப்பம் கட்டும் கூடங்கள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்தரங்கள், குளிர்பதன வசதிகள், தரம் பிரிப்பு மற்றும் வகைப்படுத்துவதற்கான இயந்திரங்கள், குளிர்பதன வசதிகள், முதன்மை பதப்படுத்தும் மையங்கள் மற்றும் பழங்களை அறிவியல் ரீதியாக பழுக்க வைக்கும் அறைகள் போன்ற பல்வேறு உட்கட்டமைப்புகள், இயற்கை இடுபொருட்கள் உற்பத்தி, நுண்ணுயிர் உற்பத்தி நிலையங்கள், நவீன மற்றம் துல்லிய பண்ணையத்திற்கான உட்கட்டமைப்புகள், அரசு மற்றம் தனியார் பங்கேற்புடன் அமைக்கப்படும் உட்கட்டமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமுதாய வேளாண் கட்டமைப்புகளுக்கு கடன் வசதி பெறமுடியும்.

மேற்காணும் உட்கட்டமைப்புகளை உருவாக்க உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், தனிப்பட்ட விவசாயிகள், கூட்டுப் பொறுப்புக்குழு,    வேளாண் தொழில் முனைவோர், புதிதாக தொழில் துவங்க முன்வரும் நிறுவனங்களுக்கு கடன் வசதி செய்து தரப்படும்.
இத்திட்டத்தின் கீழ், அதிகப்பட்சமாக ரூ.2 கோடி வரை பெறும் கடனுக்கு 7 ஆண்டு காலத்திற்கு ஆண்டிற்கு 3 சதவீத வட்டி தள்ளுபடி, சிறுமற்றும் குறு நிறுவனங்களுக்கு அதிகப்பட்சமாக ரூ.2 கோடி கடனை பெறுவதற்கு அரசே கடன் உத்திரவாதம் அளிப்பது போன்ற வசதிகள் செய்து தரப்படும்.

இந்த கடன் வசதியை பெற விரும்புவோர் மாதிரி விரிவான திட்ட அறிக்கையை  agriinfra.dac.gov.in  என்ற இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து முழுமையாக விவரங்களை பூர்த்தி செய்து வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), கதவு எண் 93(10), 4வது தெரு, அண்ணாநகர், குத்துக்கல்வலசை, தென்காசி-627 803 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்கலாம்.

இத்திட்டம் தொடர்பான தகவல்களை பெற வேளாண் விற்பனைத் துறையை 9994095773   7010254484 என்ற எண்ணில் அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

நிருபர் நெல்லை டுடே

https://www.nellai.today