தென்காசி,  நவ.5:

சிவகிரியில் தேசிய நெடுஞ்சாலைக்கு நில எடுப்பு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தென்காசி மாவட்டம் வழியாக திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதற்கான நிலஎடுப்பு ஆலோசனை கூட்டம் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் நிலஎடுப்பு அலுவலர் அனிதா தலைமை வகித்தார். திட்ட இயக்குநர் வேல்ராஜ் முன்னிலை வகித்தார்.

சிவகிரி நிலஎடுப்பு தாசில்தார் தெய்வசுந்தரி, கடையநல்லூர் நிலஎடுப்பு தாசில்தார் கிருஷ்ணவேல், சிவகிரி காவல் ஆய்வாளர் மனோகரன்,  தேசிய நெடுஞ்சாலை 744 நன்செய்மீட்பு, மற்றும் சாலை மாற்றமைப்பு சங்கம் தலைவர் மாடசாமி, செயலாளர் சரவணக்குமார், பொருள்ளார் பார்த்தசாரதி மற்றும் 40 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். https://www.nhai.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today