தென்காசி, சூலை 31:
தென்காசி மாவட்டம் கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியிலும், செங்கானுர் கிராமத்திலும் சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு 7000 பூமிபந்துகள் வீசும் நிகழ்வு நடைபெற்றது.
கோதண்டராமபுரம் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் மற்றும் பாட்டப்பத்து டால்பின் வாழ்வியல் அமைப்பு, தென்காசி தென்பொதிகை தமிழ் சங்கம், சங்கரன்கோவில் ஆர்ட் ஆஃப் கிவ்விங் சாரிட்டபிள் ட்ரஸ்ட், சார்பாக பூமிப்பந்துகள் தயாரித்து மலைப்பகுதியில் வீசப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு டால்பின் வாழ்வியல் அமைப்பு மற்றும் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் சார்பாக அதன் ஒருங்கிணைப் பாளரும் பூமிபந்து தயாரித்தலின் பயிற்சியாளரான ச.சுரேஷ் தலைமை தாங்கினார்.
இசக்கிமுத்து வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற கடையம் வனவர் முருகசாமி கருத்துரை வழங்கி பூமிப்பந்துகள் வீசும் நிகழ்வை தொடங்கி வைத்தார். திரைப்பட உதவி இயக்குநர் உமாபாலன் மற்றும் தென் பொதிகை தமிழ் சங்க செயலர் துரைமுருகன் கருத்துரை வழங்கினர்.
கோதண்டராமபுரம் சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆஃப் லைஃப் சயின்ஸ் மற்றும் பாட்டப்பத்து டால்பின் வாழ்வியல் அமைப்பு, தென்காசி தென்பொதிகை தமிழ் சங்கம், சங்கரன்கோவில் ஆர்ட் ஆஃப் கிவ்விங் சாரிட்டபிள் ட்ரஸ்ட் அமைப்பினர் பூமிப்பந்துகள் தயாரித்து அதிக அளவில் மரங்களை வளர்க்கும் நோக்கத்தில் பருவமழை காலங்களில் மரம் வளர்ப்பு பகுதியிலும் வறண்ட பகுதியிலும் வீசி வருகின்றனர்.
கடையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் பூவரசு,புங்கை, மயில் கொன்றை, செங்கொன்றை, மஞ்சள் கொன்றை, நாவல், வேம்பு, வாகை, புளி, சூபாபுல், செண்பகம் உள்ளிட்ட 7000 பூமிபந்துகள் வீசப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் டால்பின் வாழ்வியல் அமைப்பினர் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மனோஜ் பிரபாகரன், முருகேஷ், கார்த்திக் ராஜா, மாதவன்,அஜி, பிரபாகரன், கவின்,முரளி, சூர்யா, இஷாந்த், மற்றும் வனஊழியர்கள் வேல்முருகன், வேல்சாமி ஆகியோர் கலந்து கொண்டு வனப்பகுதியில் பூமிபந்துகளை வீசினர் முடிவில் இசக்கிராஜ் நன்றி கூறினார்.
நெல்லை டுடே