தென்காசி, நவ. 1:

தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத் திட்டத்தியி கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தரராஜ் பயனாளிகளுக்கு புதிய காப்பீட்டு அட்டைகள், காப்பீட்டு திட்டத்தில் அறுவை சிகிச்சை செய்த பயனாளிகளுக்கு நினைவு பரிசுகள் மற்றும சிறப்பாக ; பணியாற்றிய அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்கினார்.

தென்காசி மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் புதிதாக 4,417 குடும்பங்கள் பயன்
பெறும் வகையில் காப்பீட்டுத்திட்ட அடையாள அட்டைகள் இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் அன்னை சத்யா குழந்தைகள் நல காப்பகத்தில் உள்ள 48 ஆதரவற்ற குழந்தைகளுக்கும், கொரோனாவால் பெற்றோரை இழந்த 119 குழந்தைகளுக்கும் மருத்துவ காப்பீட்டு புதிய அடையாள அட்டையினையும், இத்திட்டத்தின் கீழ் இருதய சிகிச்சை செய்து பூரண குணமடைந்த பயனாளிகளுக்கு நினைவு பரிசுகளையும் வழங்கி மேலும் சிறப்பாக பணியாற்றிய காப்பீட்டு ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் வார்டு மேலாளர்களுக்கு நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் கோபாலசுந்தரராஜ் வழங்கினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர்; தெரிவித்ததாவது:-

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரால் 23.07.2009 அன்று
தொடங்கப்பட்டது. முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம். இத்திட்டம் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்துடன் ஒருங்கிணைந்து 23.09.2018 முதல் சிறந்த முறையில் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் திட்ட பயனாளிகளுக்கு ரூ.5 இலட்சம் வரை காப்பீட்டுத்தொகை உயர்த்தி வழங்கப்படுகிறது. தென்காசி மாவட்டத்தில் முதலமைச்சரின்
விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மற்றும் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கியத்திட்டத்தின் மூலம் 12 அரசு மற்றும் தனியார் மருத்துவனைகள் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்கு  சேவை புரிந்து வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ் 2020-21 ஆம் நிதியாண்டில்; தென்காசி மாவட்டத்தை சேர்ந்த
மருத்துவமனைகள் மூலம் 2021 பயனாளிகளுக்கு ரூ.1,63,65,575/- சிகிச்சைக்காக அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் ஏழை மற்றும் எளிய மக்கள் நோய் பாதிப்பிலிருந்து மீண்டு வர மாண்புமிகு முதலமைச்சரின் ஆணைககு; இணங்க 07.05.2021 முதல் தனியார் மருத்துவனைகளில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம் மூலம் 72 பயனாளிகளுககு; ரூ.78,04,000/- சிகிச்சைக்காகஅளிக்கப்பட்டுள்ளது.  

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அட்டை பெறுவதற்கு வேண்டிய ஆவணங்களான குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் ஆண்டு வருமானம் ரூ.72000 குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பிரிவில் சமர்பித்து காப்பீட்டு அட்டையை (ஸ்மார்ட்  கார்டை) பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்;.

அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் காப்பீட்டு திட்டத்தில்
பயனடைந்த பயனாளிகளுடன் கலந்துரையாடி அவர்களை பாராட்டினார்;
இந்நிகழ்ச்சியில் இணைஇயக்குனர் மருத்துவம் மறறும் ஊரக நலப்பணிகள்)
மரு.வெங்கடரெங்கன், தேசிய சுகாதார திட்ட ஓருங்கிணைப்பாளர் மரு.கார்த்திக், அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் மற்றும் மாவட்ட காப்பீட்டு திட்ட அலுவலர் காசி விஸ்வநாதன் உட்பட பலர் கலந்துக்கொண்டனர். https://www.tenkasi.nic.in,

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today