நெல்லை,  நவ.13:

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்ற மனித உரிமை மீறல் தொடர்பாக நெல்லை அரசு சுற்றுலா மாளிகையில்  2-வது நாளாக வழக்கு விசாரணை நடந்தது.

மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார். அப்போது பலர், எங்களை போலீசார் அடித்து துன்புறுத்தி, பொய் வழக்கு போட்டனர் என்று கூறி நீதிபதி முன்பு அழுது, கண்ணீருடன் தெரிவித்தனர். 

நேற்று மட்டும் 38 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. பெரும்பாலான வழக்குகளில் போலீஸ் அதிகாரிகளே விசாரணைக்கு வந்திருந்தனர். இதனால் போலீசார் கூட்டம் அதிகமாககாணப்பட்டது. https://www.shrc.tn.gov.in

செய்தி நிருபர் நெல்லை டுடே
https://www.nellai.today